Posts

Showing posts from May, 2021

நாயாக வேண்டுமா மனிதன்

Image
  ஏன் நாய்கள் மனிதனைவிட குறைந்த காலமே வாழ்கின்றன ? ஆறுவயது சிறுவனின் வியப்பூட்டும் பதில் இதோ.... .   பத்துவயது நிறைவடைந்த ‘ஐரிஸ் வேட்டை நரி’ ( Wolf   Hound)  வகையைச் சார்ந்த ‘பெல்கர்’என்ற பெயருடைய நாய் ஒன்றை பரிசோதிக்க, கால்நடை மருத்துவரான எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பெல்கரின் உரிமையாளர்களான ரான் மற்றும் லிசா தம்பதியினர் மற்றும் அவர்களது மகன் குட்டிப்பையன் ஷேன் ஆகிய அனைவரும் பெல்கரின்பால் பேரன்பு கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் ஒரு அற்புதத்தை நம்பியிருந்தனர். பெல்கரை பரிசோதித்த நான், அவன் புற்றுநோயால் இறந்துகொண்டிருப்பதை அறிந்தேன். எந்த வகையிலும் பெல்கரை காப்பாற்ற முடியாத சூழ்நிலையை, அக்குடும்பத்திடம் விளக்கி கூறிய நான் ,  பெல்கரை கருணை கொலை செய்ய பரிந்துரைத்தேன். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொண்டிருந்தபோது, குட்டிப்பையன் ஷேனின் பெற்றோர்கள் என்னிடம், ஷேன் இக்கருணை கொலையை கவனித்தால் நல்லது என்று நினைப்பதாக கூறினார்கள். ஷேன் இதிலிருந்து சில முக்கிய அனுபவங்களை பெறமுடியும் என்று உணர்ந்தார்கள். மறுநாள் நான் அவர்களிடம் சென்றபோது, பெல்கரின் குடும்பம் அவனை சுற்ற...

வினை விதைத்தவன் வினை அறுப்பானா? நீங்க என்ன நினைக்கிறீங்க?

Image
  அந்த குடும்பத் தலைவி ஒரு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. தலைவர் ஓய்வு பெற்ற அரசு உயர் அலுவலர். ஒரே மகன்... படித்து பட்டம் பெற்று வங்கி அதிகாரியாகிறான். அவர்கள் வீட்டில் செல்லமாக... பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்ட ஒரு வெள்ளையன் - நான்கு கால் நன்றியுள்ளவன். பெயர் மணி. வங்கி அதிகாரி மகனுக்கு ஜோடி சேர்க்கப்படுகிறது. வீட்டிற்குள் மருமகள் வருகிறாள். பொதுவாக மாமியார்தானே வெளியேறவேண்டும். கவனிக்க: இங்கு மாமியாரா? செல்லமாக வளர்க்கப்பட்ட மணியா? என்று சர்ச்சை எழுகிறது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தில் ஒருவராக இருந்த மணி, வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு, வீட்டின் சுற்றுச்சுவருக்குள் அடைக்கப்படுகிறான்.  இதோடு முடியவில்லை மணியின் பாடு. மருமகள் சூல்கொள்ள... அவ்வப்போது மணி வீட்டின் சுற்றுச்சுவரையும் தாண்டி வெளியே விரட்டப்படுகிறான். மருமகள் வயிற்றில் வளரும் பிள்ளைக்கு ‘தொற்று’ (Infection) வந்துவிடுமாம். இது நடந்தது காரோனாவின் முதல் அலை தொடங்கிய காலம்; அதாவது கடந்த (2020) வருடம். மணி, தொடர்ந்து விரட்டியடிக்கப்பட நம் வீடு, நம் அலுவலகம் தேடி உணவுக்காக வந்தவனை வழக்கம் போல ‘ஸ்பார்க்’ மற்று...