நாயாக வேண்டுமா மனிதன்
ஏன் நாய்கள் மனிதனைவிட குறைந்த காலமே வாழ்கின்றன ? ஆறுவயது சிறுவனின் வியப்பூட்டும் பதில் இதோ.... . பத்துவயது நிறைவடைந்த ‘ஐரிஸ் வேட்டை நரி’ ( Wolf Hound) வகையைச் சார்ந்த ‘பெல்கர்’என்ற பெயருடைய நாய் ஒன்றை பரிசோதிக்க, கால்நடை மருத்துவரான எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பெல்கரின் உரிமையாளர்களான ரான் மற்றும் லிசா தம்பதியினர் மற்றும் அவர்களது மகன் குட்டிப்பையன் ஷேன் ஆகிய அனைவரும் பெல்கரின்பால் பேரன்பு கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் ஒரு அற்புதத்தை நம்பியிருந்தனர். பெல்கரை பரிசோதித்த நான், அவன் புற்றுநோயால் இறந்துகொண்டிருப்பதை அறிந்தேன். எந்த வகையிலும் பெல்கரை காப்பாற்ற முடியாத சூழ்நிலையை, அக்குடும்பத்திடம் விளக்கி கூறிய நான் , பெல்கரை கருணை கொலை செய்ய பரிந்துரைத்தேன். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொண்டிருந்தபோது, குட்டிப்பையன் ஷேனின் பெற்றோர்கள் என்னிடம், ஷேன் இக்கருணை கொலையை கவனித்தால் நல்லது என்று நினைப்பதாக கூறினார்கள். ஷேன் இதிலிருந்து சில முக்கிய அனுபவங்களை பெறமுடியும் என்று உணர்ந்தார்கள். மறுநாள் நான் அவர்களிடம் சென்றபோது, பெல்கரின் குடும்பம் அவனை சுற்ற...